🔴 VIDEO போராட்டத்தில் தொடரும் பதற்றம்! துரத்தியடிக்கப்பட்ட அமைச்சர் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர்!

யாழ்ப்பாணத்தில் செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி குழுவினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

அதன்போது, போராட்டக்காரர்கள் செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியே அமைச்சரை விரட்டியடித்தனர்.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் காத்திருந்த நிலையில் சூழ்ந்து கொண்ட போராட்ட காரர்கள் அவரையும் விரட்டியடித்துள்ளனர்.

இந்த நிலையில், செம்மணியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிய அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் கடும் குழப்ப நிலை தொடர்ந்து வருகிறது.

முன்னதாக போராட்டக் களத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானத்துடனும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முரண்பட்டனர்.

அதன்போது, எதிர்ப்பை தாங்க முடியாமல் போராட்டக்களத்தை விட்டு சிவஞானம் உடனடியாக வெளியேறியிருந்தார்.

இதேவேளை, சிவஞானம் வருவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் போராட்டக்களத்திற்கு வருகை தந்ததுடன், அவரும் மக்கள் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேறி சென்று இருந்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!