இலங்கைக்குள் போதைப்பொருளைக் கடத்திய கனேடிய பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து ரூ.180 மில்லியன் மதிப்புள்ள ஹசிஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய கனேடிய நாட்டவர் ஆவார்.
பல்கலைக்கழக மாணவர் என்று கூறப்படும் அவர், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வானூர்தி மூலம் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், சோதனையின் போது, அவரது உடமைகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18.253 கிலோ கிராம் ஹசிஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
