மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாய், மகன் பலி; ஒன்றரை வயதுக் குழந்தை தீவிர சிகிச்சை

தம்புள்ள – மஹியங்கனை பிரதான வீதியில், தமனயாய பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை (11) நிகழ்ந்த இந்த விபத்தில் 63 வயதான தாயும், அவரது 43 வயதான மகனும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் ஒன்றரை வயது மகனும் படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்து கொழும்பிலிருந்து கல்முனைக்கு சென்றுகொண்டிருந்த போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் தமனயாய பகுதியில் திரும்பமுற்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalRajapaksa
30 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை: நாமல் ராஜபக்ஷவை விடுவிக்கக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
RanilWickremesinghe
மனைவியின் பட்டமளிப்பு விழாப் பயணம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!
JaffnaHinduCollege
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் வழக்கில் சமரச முயற்சி: அக்டோபர் 30க்கு ஒத்திவைப்பு!
JeevanThondaman
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இனவாதம்: மலையக மக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு
Pillayan
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு: பிள்ளையானுக்கு அக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியல்!
GnanasaraThero
ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 இல் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை