யாழில் கடந்த வருடத்தில் மாத்திரம் 62 கோடி ரூபாய் மோசடி – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஏ.பி.எஸ்.ஜெயமகா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் விசேட குற்றவிசாரணைப் பிரிவில் கடந்த வருடம் 225 மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக இடம்பெறும் மோசடிகள், இணையக் குற்றங்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகள், காணி மோசடிகள், ஒன்லைன் மோசடிகள் என்பனவே அவற்றில் கணிசமானவையாகும்.

இந்த மோசடிகள் மூலம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 200 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய மோசடிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மீண்டும் அதிகரித்து வருகின்றன. இலங்கையின் வேறு பகுதிகளைக் காட்டிலும் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவு மோசடிகள் இடம்பெறுகின்றன.

வெளிநாட்டு வாழ்க்கையில் மக்களுக்கு இருக்கும் ஆசையை மோசடியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!