காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க நடவடிக்கை!

இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான நபர்கள் காணாமல் போயுள்ளனர்.

அவ்வாறான நபர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் அவர்களின் உறவினர்கள் நீண்ட காலமாக துயரத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 25 வருடகாலத்துக்கும் மேலாக காணாமல் போயுள்ள நபர்கள் தொடர்பில் அவர்கள் இறந்து விட்டதாக கருதப்பட்டு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன் மூலம் அவர்களின் உறவினர்களின் துயரங்களை குறைத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்று அரசாங்கம் கருதியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை, 10,000 க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் வலுக்கட்டாயமாகக் காணாமல் போதல்கள் தற்செயலான சம்பவங்கள் அல்ல. அவை குற்றங்கள் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் அதிகாரி!
school boy death
தலைநகரில் பிரபல பாடசாலை மாணவன் உயிரிழப்பு பிரதி அதிபர் உட்பட 7 பேர் கைது!
jaffna
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு!
northern province
வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
power cut
மீண்டும் நாட்டில் மின்வெட்டு ஏற்படும் அபாயம்?
airport
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!