இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்த அமெரிக்க பெண் ஒருவர் கண்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று மாதங்களாக தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
55 வயதான அமெரிக்க பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தவர் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
பெண்ணின் உடலம் கண்டி தேசிய மருத்துவமனையின் பிரேத அறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
