36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள அம்மன் கோயில்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள, சுமார் இரண்டு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் மீண்டும் ஒருமுறை பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பாணம் – வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இலங்கை இராணுவம், தமிழர்களின் தனியார் காணியை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலேயே மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தனியார் காணி ஊடாக ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்ல இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியை அகலப்படுத்தும் முயற்சி, உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பினை அடுத்து இராணுவத்தால் கைவிடப்பட்டுள்ளது.

இராஜேஸ்வரி அம்மன் கோயிலும் அதன் சுற்றுப்புறப் பகுதியும் ஜூன் 15, 1990 அன்று உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. மே 2002 முதல், விசேட அனுமதியின் பின்னர், ஒரு சிலருக்கு மாத்திரம் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

போர் தீவிரமடைந்ததால், ஜூன் 2006 இல் அந்த அனுமதியும் நிறுத்தப்பட்டதோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக அப்பகுதி மக்களுடன் கோயிலுக்குச் சென்றார்.

பெப்ரவரி 3, 2015, மகா சிவராத்திரி முதல், இராணுவ அனுமதி பெற்றவர்கள் மாத்திரமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக, ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகக் குழு கூறுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், ஜூன் 24, 2023 அன்று வடக்கில் 234 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை ஒட்டி, சைவர்கள் மீண்டும் ஆலயத்தில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். எனினும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை என்ற நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vavuniya
முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
Sugeeswara Bandara
நரம்பு வெடித்துக் தீவிரமடைந்த பாதிப்பு: சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கை!
PineappleExport
இலங்கை ஏற்றுமதித்துறையில் புதிய சாதனை: பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் செல்லும் அன்னாசிப்பழங்கள்
ChineseNationals
கொழும்பு துறைமுக நகர் கொலை சம்பவம்: சட்டவிரோதமாக தங்கியுள்ள 3 சீனர்களைக் கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவை
GoldStatue
2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!
jaffna eye issue
பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!