பாரிய தாக்குதலை மேற்கொள்ளவிருந்தவர் கொழும்பில் அதிரடியாக கைது!

கொழும்பில் பாதாள உலக தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ கமாண்டோ படையின் ஓய்வுபெற்ற சார்ஜென்ட் மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருடன் நேற்று முன்தினம் இரவு மாலபேயில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து பல இராணுவ கமாண்டோ உடைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

டுபாயில் உள்ள இராணுவ கமாண்டோ படையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு சிப்பாய் இந்த துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களை தனக்கு அனுப்பியதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

அவர் பாதாள உலக தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் பெப்ரவரி மாதம் ஓய்வுபெற்ற இராணுவ கமாண்டோ படை உறுப்பினராகும். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!