யாழ்ப்பாணம் சுற்றுலா வந்த பௌத்த பிக்கு நாக விகாரையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் நேற்றிரவு உறக்கத்துக்கு சென்ற நிலையில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (1)
பெண்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மோசமான சம்பவம்: சிக்கிய கோடீஸ்வர வர்த்தகரின் மகன்
New Project t
செம்மணிப் புதைகுழியில் இருந்து வெளிவந்த சவப் பெட்டி!
New Project t (5)
சொத்துக்குவிப்பு முறைப்பாட்டை வரவேற்கும் சிறீதரன் : பின்புலத்தில் உள்ளவர்களுக்கு பளார் பதில் பதிலடி!
New Project t (3)
அதிகமாக கோழிக்கறி சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் அபாயம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
New Project t
செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: பிரபல நடிகர் கருணாஸ் வேண்டுகோள்!
cat
உங்கள் வீட்டிற்கு பூனை அடிக்கடி வருகின்றதா? காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!