🔴 VIDEO கனடா இனவெறி கும்பல் அட்டூழியம் : இரத யாத்திரையில் நடந்த அசம்பாவிதம்

கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, இனந்தெரியாதவர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தி பாடல்களை பாடியபடியும், கடவுளின் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடி இந்தியர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது சிலர் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. அந்த காணொளியில் சாலையின் ஓரத்தில் இருந்த கட்டடங்களில் இருந்து முட்டைகளை, யாத்திரை சென்ற இந்தியர்கள் மீது வீசுவது தெரிய வந்தது. இது இனவெறி தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, ‘முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தும் போது அதிர்ந்து போய் விட்டோம். எங்களின் ரத யாத்திரையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலை செய்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் தோல்வியடைந்து விட்டது. வெறுப்பு ஒருபோதும் வெல்ல முடியாது,’ என்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!