மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!

அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெளிநாட்டுப் பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் இன்று செவ்வாய்க்கிழமை (15) பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vidya case
மாணவி வித்தியா படுகொலை வழக்கு: இருவர் விடுதலை; மூவருக்கு மரண தண்டனை உறுதி!
பிள்ளையான்
ஐந்து கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்
accident
கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து: 17 மாணவர்கள் உட்பட 18 பேர் காயம்!
சுரேஷ் சலே
"சுரேஷ் சலேயின் கணினியைத் திறப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!" – தயாசிறி ஜயசேகர
yala national park
யால சரணாலயத்தில் விதிகளை மீறி அட்டகாசம்: 5 சுற்றுலாப் பயணிகள் அதிரடி கைது!
vijay sangeetha divorce
தமிழக முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஓகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!