கடலுக்குள் வீழ்ந்து சரக்கு விமானம் விபத்து!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற சரக்கு விமானமொன்று கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி விமான சேவைக்கு (Air ACT) சொந்தமான போயிங் 747-481 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், எமிரேட்ஸ் விமான சேவையின் EK9788 என்ற விமானப் பயணமாகத் துபாயிலிருந்து வந்துகொண்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 03.50 மணியளவில், இது வடக்கு ஓடுபாதையில் தரையிறங்கும்போது, விமான நிலையத்தின் தரைப் பணியாளர்களின் வாகனத்துடன் மோதியுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களம் (Civil Aviation Department) வெளியிட்ட அறிக்கையின்படி, விபத்தின் காரணமாக பணியாளர்கள் இருவர் கடலில் வீழ்ந்துள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், பின்னர் அங்கு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

current bill
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
iran
ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் - நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு
food prices
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்!
airport arrest
கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதான இரண்டு கனேடியர்கள்!
arrest
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது!
jaffna news
யாழில் கடந்த வருடத்தில் மாத்திரம் 62 கோடி ரூபாய் மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை