மட்டக்களப்பில் சோகம்: போன் சார்ஜ் போட்டபடி தூங்கிய 19 வயது இளைஞர் பலி!

மட்டக்களப்பு – கல்குடா, கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றியவாறு (charge) மார்பில் வைத்துக்கொண்டு உறங்கிய இளைஞர் ஒருவர், தொலைபேசி வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் சம்பவத்தன்று மாலை வீட்டில் உறங்குவதற்காகச் சென்றபோது, தனது கையடக்கத் தொலைபேசியை மின் இணைப்பில் மின்னேற்றியவாறு அதனை தனது நெஞ்சில் வைத்துக்கொண்டு உறங்கியுள்ளார்.

இந்த நிலையில், கையடக்கத் தொலைபேசி அதிக வெப்பமாகி வெடித்ததில் காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் உடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!