இராணுவ முகாமிற்குள் ஏற்பட்ட மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

14வது பொறியியல் சேவை படைப்பிரிவு இராணுவ முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தலங்கமா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தரமுல்ல – நாகஹமுல்ல பகுதியில் இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

14வது பொறியியல் சேவை படைப்பிரிவு முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் ஒருவரால் மற்றொருவருக்கு கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் தலையிலும் உடலிலும் காயமடைந்துள்ளார்.

கடுமையாக காயமடைந்த அவர் இராணுவத்தினரால் தலங்கமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்னி உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைக்குற்றத்தில் தொடர்புடைய சந்தேகநபரை தலங்கமா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை தலங்கமா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

In the conflict between brothers
சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
The four sluice gates
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!
Sivajilingam
அவசர சிகிச்சை பிரிவில் வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அனுமதி!
italy
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
landslide
பேரிடரில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ்!
Woodler
கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்:அநுர அரசின் அதிரடி நடவடிக்கை!