செம்மணிப் புதைகுழியில் இருந்து வெளிவந்த சவப் பெட்டி!

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பிரேதப் பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் இருந்து குழந்தையின் என்புத் தொகுதி ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தியின் இரண்டாம் கட்ட 20 ஆம் நாள் அகழ்வில் 02 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 90 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி, 81 என்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (25) இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருந்து பிரேதப் பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டது.

அந்தச் சடலம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது என்பதைச் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் அடிப்படையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அது மீளவும் மண் போட்டுப் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளது.

தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

5 glas
தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேர்களுக்காக காத்திருக்கும் 3,07959 மாணவர்கள்
New Project t (13)
செம்மணி மனித புதைகுழி வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்!
exam
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: வெளியான முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
யாழில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (9)
விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் சிஐடியினர் வெளியிட்ட தகவல்!
New Project t (7)
வீதியில் காரை நிறுத்தி மக்களுக்கு “ஹாய்” சொன்ன ஜனாதிபதி அநுர: வைரலாகும் காணொளி!