யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வுகள் இடம்பெறும் பகுதியில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் அறிவிப்பு பலகை ஒன்று நாட்டப்பட்டது.

குறித்த நீதிமன்ற அறிவிப்பு பலகையை தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் சன்முகநாதன் பிரதீபன் தனது முகநூலில் பதவிட்டு “இனி அரியாலை சித்துப்பாத்தி இப்படியா அழைக்கப்படும் (அரியாலை சித்துபாத்தி செம்மணி என்றா)” என பதிவிட்டிருந்தார்.

பின்னர் “ஊடகம் செம்மணி சித்துப்பாத்தி எண்டுது, இனி அரியாலை சித்துப்பாத்தி இப்படியா அழைக்கப்படும்? ( அரியாலை சித்துப்பாத்தி செம்மணி என்றா? ) அகழ்வு நடைபெறும் இடம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் ( உங்கட அரசியலுக்கு ஊரை மாத்தாதையுங்கோடா )” என தனது பதிவை எடிட் செய்து தொடர்ந்தும் நீதிமன்ற அறிவிப்பு பலகையை கேலிசெய்து தனது பதிவினை இட்டுள்ளார்.
சுயாதீனமாக இயங்கும் இலங்கை நீதித்துறை கட்டமைப்பை NPPயின் ஒரு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கேள்விக்குட்படுத்த நினைப்பது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி எனவும். இவ்வாறானவற்றை NPP அரசாங்கமும் ஊக்கிவிக்கின்றதா எனவும், இவ்வாறானவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் உரிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.