யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பையும் மீறி , அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர் , சுத்திகரிப்பு பணியாளர்களின் மேற்பார்வையாளரின் கையடக்க தொலைபேசியை களவாடியுள்ளார்.

இது தொடர்பில் அறிந்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் விரைந்து செயற்பட்டு , கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞனை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பான பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna news
யாழில் உள்ள பள்ளிவாசலுக்குள் தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!
fuel
எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் - அரசாங்கத்தின் அறிவிப்பு
Fraser,Heights,,Surrey,,Vancouver,,British,Columbia,,Canada,-,February,6,
கனடாவில் துப்பாக்கி சூடு: கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன்
iran
போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை: ஈரான் எச்சரிக்கை
jaffna
யாழ். கடல் வழியாக தங்கம் கடத்தல் முயற்சி: இருவர் கைது
Klangan Referral Hospital
கிளங்கன் ஆதார மருத்துவமனை சர்ச்சை: எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை