அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.
வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
முன்னதாக, இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்திருந்த வரி 44% ஆகும்.
வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (09) அறிவித்தார்.
இலங்கையைத் தவிர, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கும் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், புருனே மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் 25% வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் 20% வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
