கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு! வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய சாரதி!

கிளிநொச்சியில் டிப்பர் வாகணமொன்றின் மீது பொலிசாரால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் பயணித்த டிப்பர் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இரவு 9.30 மணியளவில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை புளியம்பொக்கனை சந்தியில் வைத்து பொலிசார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிசாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் வாகனம் சென்ற நிலையில், பொலிசாரினால் து்பாக்கி சூடு மேற்கொள்ளப்டப்டுள்ளது.

பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்ட நிலையில், வாகன சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை மீட்ட காவல்துறையினர் சாரதியை தேடி வருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (6)
யாழில் நீர் குழாய் புதைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
New Project t (4)
முத்தையன்கட்டு குடும்பஸ்தரின் மரணம்: 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
New Project t (3)
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!
New Project t (1)
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!
New Project t
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
“தமிழ்ல பேசு அம்மா” ஆங்கிலத்தில் பேசிய தாயிடம் அழுது புலம்பிய மகன்!