முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அதிரடியாக கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலங்கம பொலிஸாரால் சற்றுமுன்னர் ( 25) கைது செய்யப்பட்டுள்ளார்.

போர் வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று காலை அவர் முன்னிலையாகியிருந்தார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.

கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுத்தூபியில் போர் வெற்றி நாள் இறுதி ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது வீரவன்ச தலைமையிலான சுமார் 35 பேரடங்கிய குழுவினர் சென்று கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன் முரண்பட்டிருந்தனர்.

இதன்போது மே 19ஆம் திகதி நடைபெறவிருந்த போர் வெற்றி நாள் ஒத்திகை நடவடிக்கைகளுக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவித்து, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் பலவந்தமாக நுழைய முயன்ற நிலையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

பதற்றமான சூழ்நிலை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றைய தினம் தலாங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு வீரவன்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்