நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது சபாநாயகரை “வாயை மூடுங்கள்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றைய (23.07.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களை தொடர்ந்து வாய்மூல விடைக்கான வினாக்களின் போது சபாநாயகரை “வாயை மூடுங்கள்” எனரோகினி குமாரி விஜேரத்ன எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.