இஸ்ரேலில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த சம்பவம் இஸ்ரேலின் கிரியாட் மலாச்சி பகுதிக்கு அருகே நேற்று இடம்பெற்றுள்ளது.
பேருந்து தீப்பிடித்த போது அதில் இலங்கையை சேர்ந்த 20 இளைஞர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனம் தீப்பிடித்த போது கதவு வேலை செய்யாததால், வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தின் ஜன்னல்களை உடைத்து வெளியேறியதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.
இந்த அனர்த்தம் காரணமாக ஒரு இளைஞர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலுமாக எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டது.