முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

இன்று (01) முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஷ்வர பண்டார, வரும் ஜூலை 08-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு, ஜூலை மாதம் 08 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.

அதுவரை சந்தேகநபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படுவார் என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று உத்தரவிட்டார்.

இந்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளை முன்னெடுக்கும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்