இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவித்த வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் ஞானசார தேரர்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான, வழக்கின் விசாரணைத் திகதியை நிர்ணயிப்பதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (1) பரிசீலிக்கப்பட்ட போது, பிரதிவாதியான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பூர்வாங்க வழக்கு விசாரணை மாநாட்டை நிறைவு செய்த மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல, வழக்கின் விசாரணைத் திகதியை நிர்ணயிப்பதற்காக அதனை ஜூன் மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!