ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கோரி, 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் விசேட பிரசாரம் இன்று (26) மிஹிந்தலை புனித பூமியில் தொடங்கியது.

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி மற்றும் மகா சங்கத்தினர் இந்த மனுவில் முதற்கட்டமாக கையெழுத்திட்டனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விசேட கோரிக்கை விடுத்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுவித்திருந்தார்.

இருப்பினும், அந்தப் பொதுமன்னிப்பு சட்டப்படி செல்லாது என உயர் நீதிமன்றம் கடந்த 10 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இந்தநிலையில், மிஹிந்தலை என்பது உலகிற்கே அபயதானத்தை (உயிர்ப்பிச்சை) அறிமுகப்படுத்திய புனித பூமி என்பதால், இந்த மனுவில் கையெழுத்துக்களைத் திரட்டி, மகாநாயக்க தேரர்கள் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விகாராதிபதி மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!