வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!

வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

​இன்று புரட்டாசிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாரி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

​இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் வருகை தந்த குழுவினர், ஆலய வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த மத வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இதனால் அங்கு கூடியிருந்த இந்து மக்களிடையே அதிர்ச்சியும் எதிர்ப்பும் நிலவி வருகிறது.

சம்பவ இடத்தில் பெருமளவிலான பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, அவர்களின் பெயர் மற்றும் விவரங்களை முழுமையாகப் பதிந்த பின்னரே பொலிஸாரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளூமன்ற உறுப்பகனர் கஜேந்தகரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வைத்தியர் பி. சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

​வழிபாட்டிற்கு வரும் பொதுமக்களை வழியில் மறித்து இடையூறு செய்யாமல், அவர்கள் சுதந்திரமாகச் சென்று இறைவனை வழிபட அனுமதிக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் பொலிசாரிடம் தீவிரமாகக் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!