சர்வதேச சந்தையில் சரிந்தது தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று ( 26) பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

கடந்த சில காலங்களாக உயர்வடைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாகக் குறைந்துள்ளமை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 125.39 அமெரிக்க டொலர்களால் (2.75%) சரிவடைந்துள்ளது.

இதன் மூலம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 4,428.17 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 653.55 அமெரிக்க டொலர்களால் (12.55%) வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை வெள்ளியின் விலையும் இன்று 6.03 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 4.37 டொலர்களால் சரிந்து 68.06 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

தற்போதைய இந்த திடீர் சரிவு தற்காலிகமான ஒன்றாகக் கருதப்பட்டாலும், கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்னும் 49.30 சதவீத உயர்விலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்