குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி

பிரித்தானியாவின் லண்டனில் புலம்பெயர்வோருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் 26 பொலிஸார் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து 25 பேரை பொலிஸார்கைது செய்தனர்.

லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில்,

“வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் ஏனைய நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள்.

இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்