வடக்கு கிழக்கில் இன்று முதல் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை!

வங்காள விரிகுடாவில் நாளைய தினம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தாழமுக்கம் இன்று உருவாகியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு அடுத்த சில நாட்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது நாளை இரவு அல்லது நாளை மறுநாள் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தமிழ்நாட்டின் சென்னை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத் தாழமுக்கம் நகரும்போது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கடற்பகுதிகளை அண்மித்தே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை நாளை இன்று முதல் செறிவடைந்து 24 ஆம் திகதி வரை தொடரும்.

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு அடுத்த சில நாட்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அதே வேளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பரவலாக பருவ மழை கிடைக்கும்.

அத்தோடு எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கமும் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!