யாழில் முறைகேடான சொத்துக் குவிப்பு : விசாரணைகள் தீவிரம்!

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு, சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள், வட்டிக்கு விடுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்குச் சொந்தமான சொகுசுக் கார்கள், ஆடம்பர விடுதிகள், இறால் பண்ணைகள், உள்ளூரிலும் வெளிமாவட்டங்களிலும் பல்பொருள் அடங்காடிகள் என்பன உள்ளன.

அந்தச் சொத்துக்கள் தொடர்பில் முழுமையான புலன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அவை சட்டவிரோதமாகப் பெறப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்தச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mano
"மலையகத் தமிழர்களுக்கு காணி இல்லையேல் வட, கிழக்கில் குடியேற்றம்" - மனோ கணேசன்
weather update
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
flood
நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
japan
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Ambitiya Thero
அம்பிட்டிய தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
crime
கணவனை தாக்கி கொலை செய்த மனைவி!