மன்னாரில் பேருந்தில் கத்தி முனையில் கடத்தப்பட்ட நபர்: பட்டப்பகலில் மாபியாக் கும்பல் அட்டகாசம்!

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கடத்தல் சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை(31) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை(31) மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகி ய நிலையில்,வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (31)மாலை மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.

இதன் போது மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,காட்டாஸ்பத்திரி பகுதியில் குறித்த பேருந்தை வழிமறித்த ஒரு குழுவினர் குறித்த பேருந்தில் ஏறி கூறிய ஆயுதங்களினால் பயணிகளை அச்சுறுத்தி,குறித்த நபரை தாக்கி பேருந்தில் இருந்து இறக்கி மோட்டார் சைக்கிலில் கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த நபரை நடுக்குடா காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற நிலையில் கடுமையாக தாக்கிய நிலையில் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

காட்டாஸ்பத்திரி கிராமத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்ற குழுவினரே குறித்த நபரை நடத்தியதாகவும் கடத்திய தற்கான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை.

இதேவேளை காட்டாஸ்பத்திரி கிராமத்தில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் பேசாலை பொலிஸார் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Charlie Kirk
அமெரிக்காவில் ட்ரம்பின் மிகப்பெரும் ஆதரவாளர் சுட்டுக்கொலை!
mathiri
மைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்
police
துப்பாக்கிச் சூட்டு முயற்சியை முறியடித்த பொலிஸார்: ஐவர் கைது!
accident
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் படுகாயம்
mahinda
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த!
New Project t (9)
உடன் அமுலுக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டம்!