அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை: அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம்(16.07.2026) நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை இடை நடுவே இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

திருவையாறு பகுதியில் லால் காந்தவால் நடப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து தொடர் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் குறித்த சம்பவத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் உடந்தையாக செயல்படுகிறார் என தாறுமாறாக தரக்குறைவாக வார்த்தை பிரயோகங்களில் ஏற்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறியுள்ளார்.

தொடர்ந்து பொது அமைப்புகள் மற்றும் தவிசாளர்களை இடையே ஏற்பட்ட வாய்த்தக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் இடைநிறுவே வெளிநடப்பு செய்ததை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து அரச திணைக்க அதிகாரிகளும் வெளியேறியதை அடுத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடை நடுவே நிறுத்தப்பட்டது

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று(16.07.2026) பகல் 9 மணிக்கு நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் வரவேற்புரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், க.இளங்குமரன், அர்சுனா இராமநாதன் உட்பட பொலிஸார், கடற்படையினர், இராணுவத்தினர், மாகான அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் திணைக்கள பதவி நிலை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!