தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான திருமணப் பதிவுகளை எளிதாக்குவதற்காக எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்பாளர்களுக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி, வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையாளர், பதிவாளர் திணைக்களத்துக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதிபலிப்பாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
அந்த திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, இதேபோன்ற விசேட முகாம் முன்னதாக 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்முறையானது தகுதியுள்ள அனைத்து தம்பதிகளும் தங்கள் திருமணங்களை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்வதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.