முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தாயும் 2 பிள்ளைகளும்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிசார் கிணற்றில் உடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் உடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட உடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

உடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி( வயது38) தாய் மற்றும் உசாகரன் மிக்சா (வயது11) மகள் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்.

இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sagara Kariyavasam
பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல்?: சாகர காரியவசமுக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பணியகம் நீதிமன்றில் மனு
Hikkaduwa Footwear
மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை: ஹிக்கடுவை பாதணி நிறுவனம் பகிரங்க அறிக்கை!
easter attack
உயிர்த்த ஞாயிறு வழக்கு:மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு பாதுகாப்பு தீவிரம்!
srilanka weather
வானிலை மையத்தின் அவசர அறிவிப்பு: பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
basil rajapaksa
வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
Ananda Wijepala
சாகர காரியவசத்திற்கு அரசு கடும் எச்சரிக்கை: பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததால் பரபரப்பு!