வெளிநாடொன்றில் நாடாளுமன்ற வளாகத்தில் உயிர்மாய்த்த எம்.பி!

பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடல் அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எமிலி பெல்டோனனின் (30) உடலே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

இந்நிலையில், அவர் எங்கள் சமூகத்தின் மிகவும் நேசிக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார், நாங்கள் அவரை மிகவும் இழப்போம்.

ஒரு இளம் வாழ்க்கை மிக விரைவாக முடிந்துவிட்டது என்று சமூக ஜனநாயக நாடாளுமன்றக் குழுவின் தலைவரான டைட்டி துப்புரைனென் தெரிவித்துள்ளார்.

சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!