கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அன்றைய தினம் இருவரதும் பிணை கோரிக்கை தொடர்பான கட்டளை பிறப்பிக்கப்படும் எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்வைத்த விடயங்களைப் பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
