இந்தியாவில் குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து வீழ்ந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 09 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா – முக்பூர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் இந்த பாலம் இருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அந்த பாலத்தின் ஒரு பகுதி யாருமே எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. 2 தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் முழு பகுதியும் இடிந்து விழுந்தது.
பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு வந்த பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மஹி சாஹர் ஆற்றில் விழுந்தன.
.விபத்தைத் தொடர்ந்து தீயணைப்பு பிரிவு, பொலிஸார் இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.