நவம்பர் மாத ராசி பலன்கள்

மேஷம்

வாழ்க்கைக்கு தேவதையானதை சுயமாக தெரிவு செய்யும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு செவ்வாய் தனஸ்தானத்தை பார்வை இடுவதும் தொழில் ஸ்தானம், விரையஸ்தானத்தையும் ராசிநாதன் செவ்வாயையும் குரு பார்வை இடுவதால் எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்கள் தேடி வரும். நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்திக் கொள்ள பெரும் முயற்சிகள் எடுப்பீர்கள்.

உங்களின் களத்திர ஸ்தானத்தில் சூரியன் அமர்வது சிலருக்கு நீண்ட நாட்களாக சொல்லத் தயங்கிய காதலை வெளிபடுத்துவீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களின் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைக்கும் லாபஸ்தானத்தில் ராகுவுடன் சனி இணைவு பெற்று அமர்வது உங்களின் தொழிலில் சற்று முன்னேற்றம் உண்டாகும். சரியான பாதையை தெரிவு செய்வது உங்களின் வளர்ச்சிக்கு நல்ல உறுதுணையாக அமையும்.

கணவன் மனைவி ஒற்றுமை இருந்தாலும் சற்று சலசலப்பு இருக்கும். புத்திரர்களின் வேலை பற்றி சில முயற்சிகள் எடுக்க வேண்டி வரும். சரியான தொழில் அமைத்து கொள்வதில் இருந்த சிக்கல்கள் விலகும். சகோதரர்களின் ஒற்றுமை சில நேரம் நன்மையை தரும். விளையாட்டு துறையில் இருக்கும் அன்பர்களுக்கு, புதிய பயிற்சி நல்ல பலனை தரும். வெளியூர், வெளிநாடு செல்பவர்கள் சில மாதம் தாமதமாகும். கடன் பெற்றவர் அதனை அடைக்க சில கஷ்டங்களை அடைய வேண்டி வரும். நல்ல நண்பர்களிடம் பழகுவது நல்லது ஆசை வார்த்தை பேசுவர்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறங்கள்:

மஞ்சள், ஓரஞ்சு, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:

கிழக்கு, வடக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், செவ்வாய், புதன்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

20-11-2025 வியாழன் அதிகாலை 05.11 முதல் 22-11-2025 சனி மாலை 04.46 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வியாழன் காலை 06.00 – 07.00 வரை விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமும் அருகு மாலை கட்டி போட்டு வேண்டிக் கொள்ள சகல காரியம் சிறப்பாக இயங்கும்.

ரிஷபம்

எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதும் புதன், சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் பெறுவதும். உங்களின் தொடர் முயற்சிக்கு நல்ல பலன் தரும். களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் ராசியை பார்வை இடுவதும் நினைத்ததை சாதிக்கும் வலிமை கிட்டும்.

உங்களின் தொழில் ஸ்தானத்தில் சனியுடன் ராகு சந்திரன் இணைவு பெறுவது புதிய தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு எதிலும் தாமதம் உண்டாகும். தசை, புத்தி பலம் உள்ளவர்களுக்கு யோக பலன்கள் கிட்டும். முக்கிய ஆலோசனைகள் உங்களின் தொழிலுக்கும் உத்தியோகத்திற்கும் நல்ல பலனை பெற்று தரும். சுகஸ்தானத்தில் கேது அமர்வது தாயாரின் உடல் நலனை பாதிக்கும். உஷ்ணம் சார்ந்த உபாதைகளை தாயார் அனுபவிக்க வேண்டிவரும். சாதாரண விடயத்திற்கு கூட சில நேரம் கடுமையாக கஷ்ட பட வேண்டி வரும்.

புதிய திட்டங்களை டிசம்பர் வரை தள்ளி போடுவது நல்லது. அரசியலில் உங்களின் செல்வாக்கை தக்க வைத்து கொள்வீர்கள். எதற்கு அஞ்சாமல் எடுத்த காரியத்தை துணிவுடன் செய்து வளம் பெறுவீர்கள். கருத்து வேறுபாடுகளுடன் இருந்த உறவினர்கள் மீண்டும் நற்காரியங்களில் இணையும் வாய்ப்பை பெறுவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட நினைத்தாலும் உடல்நலனில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். கலைத்துறையினர் தங்கள் விரும்பிய நிறுவனத்தில் இணைந்து செயல்படுவீர்கள். பெண்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். தேவையான பண பலம் உங்களுக்குப் பெறுவீர்கள். துரிதமான உங்களின் பயணம் சில நேரம் நன்மையே தரும். குரு அதிசார பலன் மூலம் உங்களின் முயற்சிக்கு நன்மையை தரும். மாணவர்களின் கல்வி திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

வெண்மை, நீலம், ஓரஞ்சு.

அதிர்ஷ்ட திசைகள்:

தெற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வெள்ளி, சனி, செவ்வாய்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

22-11-2025 சனி 04.47 முதல் 25-11-2025 செவ்வாய் அதிகாலை 03.01 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வெள்ளிக்கிழமைகளில் சிவப்பு குங்குமத்தால் சுக்கிர ஓரையில் (காலை – 06 – 07, மதியம் – 01 – 02, இரவு – 08 – 09) மகாலெட்சுமிக்கு அர்ச்சனை செய்து தாமரை மலர் வைத்து வேண்டிக் கொள்ள பொருளாதார வளர்ச்சி சிறப்பாக அமையும்.

மிதுனம்

பொறுமையும் சகிப்பு தன்மையும் கொண்டு விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் தொழிலில் முன்னேற்றம் பெற செய்வார். உங்களின் தொழில் ஸ்தானாதிபதி குரு அதிசாரமாக தனஸ்தானத்தில் அமர்வதும் தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதும் உங்களின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும். மூன்றாமிட கேது உங்களின் மனவலிமை பெறவும். உறுதியுடன் இருக்கவும் உதவி செய்வார்.

உங்களின் ராசிக்கு குரு அதிசார பெயர்ச்சி தொழிலிலும் உத்தியோகத்திலும் முன்னேற்றம் பெறவும் வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் உதவி செய்வார். சுகஸ்தானத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் பெற்று வண்டி வாகன வசதிகளையும் வீடு வாங்க தேவையான உதவிகளை செய்வார். ஆறாமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பது மறைமுக எதிரகளை விரட்டி விடவும் மனதில் பயஉணர்வு முடிவுக்கு வரும் வரை நல்ல பலனையும் பெற செய்வார். திருமண காரியங்களில் உங்களால் ஆன உதவிகளை செய்வீர்கள். கலைத்துறையில் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வதுடன் அடுத்த வரும். நிகழ்ச்சிகளுக்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.

கல்வி அறிவும், திறமையும் உங்களை ஊக்கப்படுத்தி தேர்வுகளில் நல்ல பெறுபேறு பெற மாணவர்கள் மேன்மை அடைவார்கள். சொந்த தொழிலில் அதிகமான கவனம் செலுத்தி நல்ல லாபம் பெறுவீர்கள். அரசு சார்ந்த பணியில் உங்களின் ஆலோசனைகள் நல்ல பயனுள்ளதாக அமையும். கேது மூன்றாம் பார்வையாக ராசியை பார்ப்பதும். செவ்வாய் எட்டாம் பார்வையாக ராசியை பார்ப்பதும் போட்டிகளில் சுறுசுறுப்பையும் மனதில் தைரியத்தையும் பெறுவீர்கள். கடன் தொல்லைகளில் படிப்படியாக விடுதலை பெறுவீர்கள். அரசியலில் சிறந்த ஆலோசராக இருந்து புகழ் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

பச்சை, வெண்மை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:

மேற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

25-11-2025 செவ்வாய் அதிகாலை 03.02 மணி முதல் 27-11-2025 வியாழன் காலை 10.49 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரின் வழிபாடும், சிவப்பு நிற பூ இலுப்பெண்ணெய் தீபமும் ஏற்றி உங்களின் வேண்டுதலை சொல்லி வர நீங்கள் நினைத்ததை அடைவீர்கள்.

கடகம்

விரும்பியதை விரும்பியபடி செயல்படுத்தி காட்டும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு பலம் பெற்று அமைவதும் ராசிநாதன் அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து தனாதிபதி வீட்டை பார்வை இடுவதும் எதையும் சலனமின்றி செய்வதில் மிகவும் கெட்டிகாரதனத்தை அமைத்து தர சகல காரியமும் மேன்மை அடைய உங்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை உயர்வு பெறும்.

தனாதிபதி சூரியன் நீசமானதால் பணவரவு தடைபடும் என்றாலும் கூடுதல் பணி செய்து எல்லா வித பிரச்சனைகளை சரி செய்து கொள்வீர்கள். குருவின் பார்வை பெறும் இடங்கள் சிறப்பாக அமையும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று குரு பார்வையும் பெறுவதால் பூர்வீக சொத்துகள். சார்ந்த விடயம் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். குறைந்தபட்சமான முதலீடுகளை தொழில் செய்பவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். களத்திர ஸ்தானத்தை பார்ப்பது திருமணம் முன்பு பார்த்த பெண் பேசி முடிக்கும் வாய்ப்பு சிலருக்கு அமையும். திருமண திகதிகள் நிச்சயமாகும்.

அட்டம சனியுடன் ராசிநாதன் சேர்ந்திருப்பது கொடுத்த இடத்தில் பணம் வந்து சேராமல் போவதும் கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நடக்க முடியாமல் போவதும் உண்டாகும். முடிந்த வரை புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் தங்களின் வாய்ப்புகளை பகிர்ந்து கொண்டு கூட்டு முயற்சியின் நன்மையை பெறுவீர்கள். எதிலும் உங்களின் கவனம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறுதியான மனநிலையே உங்களின் முழு வெற்றி என்பதால் எதிலும் பின் வாங்காமல் தைரியமுடன் செயல்படுவதன் மூலம் நினைத்ததை அடைய வழி கிடைக்கும். அரசியலில் உடன் இருந்தவர்கள் முதுகில் குத்துவார்கள் என்பதால் கவனமுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

வெண்மை, மஞ்சள், ஓரஞ்சு.

அதிர்ஷ்ட திசைகள்:

வடக்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், செவ்வாய், வியாழன்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

27-11-2025 வியாழன் காலை 10.50 மணி முதல் 29-11-2025 சனி மாலை 04.10 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு மாலை 04.30 – 06.00 மணிக்குள் பைரவருக்கு எட்டு நல்லெண்ணெய் தீபமும் எள் கலந்த அன்னம் அரளி பூ மாலை சாற்றி வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் வெற்றியை தரும்.

சிம்மம்

சிறந்த நிர்வாக திறன் கொண்டு செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் முற்பகுதியில் நீசம் பெற்று பிற்பகுதி பலம் பெற்றும் இருப்பதும் குரு பார்வை பிற்பகுதியில் ராசிநாதனுக்கு அமைவது உங்களின் செயல்திறனை மேம்படுத்தும் உங்களின் ராசிக்கு அட்டம குருவாகி பனிரெண்டில் மறைவு பெறுவது ராஜயோக நற்பலன்களை பெற்று தரும். நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்த மனபலமும், உடல் பலமும் பெறுவீர்கள்.

உங்களின் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரன் தனஸ்தானத்தில் அமர்வது உங்களின் பொருளாதார வளம் பெற செய்யும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எதை செய்தாலும் அது விரைவில் நடக்க ஏற்பாடுகளும் அமையும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றியை தரும். அரசியலிலும், வெளி உலக நட்பு வட்டங்களிலும் உங்களின் செல்வாக்கு உயரும். புதிய திட்டங்களும் நல்ல வசதிகளையும், வாய்ப்புகளையும் பெருமிதத்துடன் பெறுவீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமான வளர்ச்சி பெற்று தரும். உத்தியோகம் பார்ப்பவரும் மேலதிகாரிகளின் உதவியும், நட்பும் பெறும் பலமாக அமையும். சரியான வளர்ச்சிக்கு வழி கிடைக்கும். தனித்தன்மையுடன் படுவீர்கள்.

கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்க உதவிகள் கிடைக்கும். இதுவரை இந்த நிறுவனத்தைவிட பெரிய நிறுவனத்தின் மூலம் கலை நிகழ்ச்சி கிடைக்கப் பெற்று வளம் பெறுவீர்கள். யோகாதிபதி செல்வாய்க்கு குரு பார்வை பெறுவதும் மங்கள காரியங்களின் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். சனியுடன் ராகு சந்திரன் சேர்க்க உங்களின் நீண்ட நாட்கள் வராத பணம் இனி வந்து சேரும். கொடுத்த இடத்தில் பொருள் வந்து சேரும் பூர்வீக சொத்து பிரச்சனை பேசி தீர்க்க வாய்ப்புகள் அமையும். தொழில் செய்பவருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஜென்ம கேது பதவியின் உயர்வு பெற உதவிகளை செய்து தருவார்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

சிவப்பு, மஞ்சள், ஓரஞ்சு.

அதிர்ஷ்ட திசைகள்:

கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு, திங்கள், செவ்வாய்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

02-11-2025 ஞாயிறு காலை 08.20 முதல் 04-11-2025 செவ்வாய் பகல் 11.44 மணி வரையும்.

29-11-2025 சனி மாலை 04.17 முதல் 01-12-2025 திங்கள் இரவு 07.53 மணி வரையும்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை காலை 09.00 – 10.30 ராகு காலத்தில் பைரவருக்கு ஐந்து நல்லெண்ணெய் தீபமேற்றி அரளி பூ மாலையும் தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் அனுகூலமாக அமையும்.

கன்னி

நுணுக்கமாக ஆராய்ந்து எதையும் செயல்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் தனஸ்தானத்தில் அமர்ந்து அட்டமாதிபதி வீட்டை பார்ப்பதால் பல காரியங்கள் வெற்றியை தரும். சுக்கிரனும், புதனும் பரிவர்த்தனை பலம் பெறுவது உங்களின் தொழில் மற்றும் உத்தியோகம் எல்லாம் வெற்றியை பெற்றுத் தரும். நினைத்த காரியத்தை வெற்றி கொள்ள நற்பலனை பெறுவீர்கள்.

உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு அமர்ந்து மூன்றாமிட செவ்வாயை பார்ப்பது நல்ல முன்னேற்றமும் உங்களின் முயற்சிகள் வெற்றியையும் பெற்று தரும். பூர்வ புண்ணியஸ்தானத்தை பார்க்க கடந்த கால காரிய தடைகள் மேலும் நல்ல படி வளர்ச்சியை தரும். காரியத்தை செயல்படுத்தும் முன்பு பல முறை யோசித்து பின்புலங்களை நன்கு ஆராய்ந்து செயல்படுவீர்கள். யாருக்கும் எந்தவித துன்பமும் உண்டாக அனுமதிக்கமாட்டீர்கள் பொதுவான பிரச்சனைகளை கையாளும் போது உண்மை தன்மை இருப்பவருக்கு உங்களின் முழு ஆதரவையும் தருவீர்கள். கடன் தீர வாய்ப்பு அமையும்.

ராசியில் சுக்கிரன் நீசம் பெற்றாலும் ராசிநாதன் பரிவர்த்தனை பெறுவதால் கலைத்துறையினர் வெற்றி பயணம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆறாமிட சனி ராகுவுடன் லாபாதிபதி சந்திரன் இணைவது வங்கி மூலம் தனிபட்ட கடன் வாங்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும் கடன் கொடுக்க பல நிறுவனம் வந்தாலும் அதில் நமது பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கடன் பெற ஆலோசனை செய்து முடிவு எடுப்பீர்கள். சொந்த காணியை பயன்படுத்த முடியாமல் இருந்த நிலை மாறி நல்ல நிலைக்கு செல்வீர்கள். கூடுதல் பணம் கிடைக்க ஆசைபட்டு இழந்த நிலையிலிருந்து விடுவித்து இனி யோசனைகளை சாதகமாக ஆக்கி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

பச்சை, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:

தெற்கு, தென்மேற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

04-11-2025 செவ்வாய் பகல் 11.45 முதல் 06-11-2025 வியாழன் பகல் 02.14 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு மாலை 04.30 – 06.00 மணிக்கு நவகிரக வழிபாடு செய்து பைரவருக்கு ஒன்பது நல்லெண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.

துலாம்

எதற்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் விரையஸ்தானத்தில் மறைந்து நீசம் பெறுவதும் சூரியனுடன் புதன் ராசியில் அமர்ந்து ராசிநாதனின் நற்பலன்களை வழங்குவார்கள். தனஸ்தானத்தை குரு பார்வை பெறுவதனுடன் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பது பொருளாதாரத்தில் உங்களின் வளம் சிறப்பாக அமையும். கிடைக்க வேண்டிய நேரத்தில் அனைத்து சலுகைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குரு உச்சம் பெற்றிருப்பதால் குரு பார்வை பெறுமிடம் சிறப்பாக அமையும்.

உங்களின் ராசிக்கு யோகாதிபதி சனி ஆட்சி பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று தொழில் ஸ்தானாதிபதி சந்திரனுடன் இணைவு பெற்று இருப்பது உங்களின் தொழில் மிகவும் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்ய தயங்கமாட்டீர்கள். உங்களின் பழைய நண்பரின் சந்திப்பு மலரும் இணைவுகளை உறுதி செய்யும். கருத்துகளை பகிர்ந்து கொள்வதில் உங்களின் பேச்சு மிகவும் இனிமையாக இருக்கும். யாரையும் பேசி கவரும் பின்புகளை பெற்று விளங்குவீர்கள். பொதுவான விடயங்களின் கொள்கையில் உறுதியுடன் செயல்படுவீர்கள். பொருளாதார வளம் நன்றாக இருக்கும்.

கலைத்துறையினர் நினைத்ததை சாதித்து காட்டி நிகழ்ச்சியை திறம்பட செய்து முடிப்பீர்கள். இரவு நிகழ்ச்சிகளில் அதிக பங்கிடவேண்டி இருக்கும். கல்வியில் திறம்பட மேன்மை அடைவீர்கள். அரசியலில் அதிகம் ஈடுபாடு இல்லை என்றாலும் அதில் சிறிது ஆர்வம் கொள்வீர்கள். புதுமையை விரும்பும் உங்களின் ரசனைக்கு வரவேற்பும் இருக்கும். பெண்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். துணிவுடன் இருப்பீர்கள். எதை செய்தாலும் அதில் முழுமையான ஈடுபாடுகளுடன் செயல்பட்டு மேலும் திறமையை உருவாக்கி கொள்வீர்கள். சொந்த வீடு கட்டும் வாய்பபு சிலருக்கு அமையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

வெண்மை, ஓரஞ்சு, நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:

மேற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வெள்ளி, சனி, செவ்வாய்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

06-11-2025 வியாழன் பகல் 02.15 முதல் 08-11-2025 சனி மாலை 04.30 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சன்னதியில் நெய் தீபமிட்டு வெள்ளை நிற பூ வைத்து நெய் அன்னம் வைத்து குங்கும அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்ள சகலமும் நினைத்தபடி வெற்றியை தரும்.

விருச்சிகம்

எதையும் துணிச்சலும், தைரியமும் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு அதிசார குரு பார்வை பெறுவதும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களின் முயற்சிக்கு சீக்கிரம் நல்ல பலன் கிடைக்கும். உங்களின் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமையும். கடந்த காலத்தை விட நிகழ்காலம் சிறப்பாக அமையும். குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி பெறுவீர்கள்.

உங்களின் ராசிக்கு தடைகள் நீக்கி பெற்றும் சனி பார்வை குரு பார்வையால் விடுதலை பெற்றதாலும் உங்களின் தடைபட்ட பல காரியம் இனி சிறப்பாக அமையும். உங்களின் தொழில் ஸ்தானாதிபதி சூரியனுடன் லாபாதிபதி புதன் இணைவு பெறுவதால் செய்யும் தொழிலில் சற்று வளர்ச்சி இருந்தாலும் நிரந்தர வளர்ச்சிக்கு சிறிது காலம் மட்டுமே இனி அமையும். அடுத்த வருடம் உங்களின் அனைத்து காரியமும் சிறப்பாக அமையும். தொழில் ஸ்தானத்தில் கேது அமர்ந்து வெளிநாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். கொடுத்த பணத்தை வாங்க பலமுறை முயற்சி செய்வீர்கள்.

தொழிலாளர்களின் முன்னேற்றமே முழு லட்சியம் கொண்டு செயல்படுவீர்கள். சரியான நேரத்தில் எதை செய்தால் பலன் உண்டு என்று ஆராய்ந்து தொழிலாளர்களின் நலனின் முழுமையான அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்காமல் உங்களின் பணியை உடனே செய்து வெற்றியை காண்பீர்கள். பொது விடயங்களில் முழு ஈடுபாடு கொண்டாலும் உங்களின் கடமைகளிலிருந்து எப்பொழுதும் விடுபடாமல் செயல்படுவீர்கள். கலைதுறையினருக்கு வேண்டிய வருமானம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கேள்வி ஞானம் பெற்று தெளிவு பெறுவீர்கள். பாதுகாப்பான உங்களின் பயணம் எப்பொழுதும் வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

ஓரஞ்சு, வெண்மை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:

வடக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

செவ்வாய், வியாழன், வெள்ளி.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

08-11-2025 சனி மாலை 04.40 மணி முதல் 10-11-2025 திங்கள் இரவு 07.55 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்து ஜெய்ஸ்ரீராம் 108 முறை பேப்பரில் எழுதி மாலை கட்டி போட்டு நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து காரியமும் நினைத்தபடி சிறப்பாக நடக்கும்.

தனுசு

மன துணிச்சலும், தைரியமும் கொண்டு விளங்கும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் அட்டம ஸ்தானத்தில் அதிசாரமாக அமர்ந்து தனஸ்தானத்தையும் விரைய ஸ்தானத்தையும் பார்ப்பதால் உங்களின் தனிப்பட்ட மன உறுதியே உங்களை வழி நடத்தும். சொன்ன படி நடக்க வேண்டுமென்று முயற்சிகளை எடுப்பீர்கள். குறுகிய கால தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குறைந்தபட்ச நன்மையை பெறுவீர்கள். எதிலும் தான் என்று எண்ணும் எண்ணத்தை விட்டு விட்டு அன்பு செலுத்தி வந்தால் எல்லாம் நன்மையாக அமையும்.

உங்களின் தொழில் ஸ்தானாதிபதி புதனுடன் யோகதிபதி சூரியன் இணைந்து பஞ்சம ஸ்தானத்தை பார்ப்பது தடைபட்ட சில காரியம் நன்மையை தரும். காத்து கிடந்த இருந்த காலம் போய் தேடி வரும். சூழ்நிலையில் நீங்கள் இருப்பீர்கள். தொழிலில் சுக்கிரனின் ஆதிக்கம் இருப்பது ஆடம்பர பொருட்கள் விற்பனையில் சாதனை படைப்பீர்கள். வருமானத்திற்கு தகுந்தபடி செலவுகளையும் குறைத்துக் கொள்வீர்கள். உறவுகளில் இருந்த கசப்பான உணர்வுகள் இனி மகிழ்ச்சியை தரும். எதையும் உரிமையுடன் செய்வீர்கள்.

பகுதி நேர வேலை செய்து வருபவருக்கு இனி நிரந்தர வேலை வாய்ப்பு அமையும். குடும்ப பாரம் சுமந்து வந்த உங்களுக்கு அதிலிருந்து விடுதலையை பெறுவீர்கள். காரண காரியமின்றி எதுவும் இல்லை என்ற நிலை உணர்வீர்கள். செய்து வந்த தவறுகளை உணர்ந்து அதிலிருந்து திருத்தி வாழ நினைப்பீர்கள். அரசு வேலையில் கடமையை செய்வீர்கள். எந்தவித எதிர்பார்ப்புமின்றி உங்களின் பணியை சிறப்பாக செய்வீர்கள். கடனிலிருந்து படிபடியாக விடுவிக்கபடுவீர்கள். சம உரிமைக்கு துணை நிற்பீர்கள். அரசியலில் இருக்கும். நிலையை தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் நினைத்தபடி சலுமைகளுடன் புதிய வாய்ப்பையும் பெற்று வளமுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

ஓரஞ்சு, சிவப்பு, பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்:

கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வெள்ளி, ஞாயிறு.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

10-11-2025 திங்கள் இரவு 07.56 முதல் 12-11-2025 புதன் இரவு 12.51 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வியாழகிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு மூன்று நெய் தீபமேற்றி மஞ்சளின் அபிசேகம் செய்து எலுமிச்சை அன்னம் வைத்து மன உருக வணங்கி வர சகல காரியமும் தடையின்றி வெற்றியை தரும்.

மகரம்

மனதில் நினைத்ததை செயலில் காட்டும் திறம் கொண்ட மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு அதிசார குருவின் பார்வை பெறுவதும் ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்வதும். செவ்வாய் லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதும் மேலும் பலம் பெற்று நற்பலன்களை பெற்று தரும். சரியான வளர்ச்சி பாதைகளை நோக்கி பயணம் செய்வீர்கள். இனி உங்களுக்கு வெற்றியை நோக்கியே இருக்கும். பிறருக்கு உதவி செய்வதை கொள்கையாக கொண்டு விளங்குவீர்கள்.

உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்தும் ராசியை குரு அதிசாரமாக பார்வையிடுவதும் உங்களின் வளர்ச்சி உறுதுணையாக அமையும். உதவி கரங்களால் அனைவரையும் அரவனைத்துச் செல்லும் பண்பு கொண்டவர்கள். நீங்கள் சமயோஜித செயல்களால் எதையும் செய்து பிரச்சனையின்றி தற்காத்து கொள்வீர்கள். மன அமைதியையும் உடல் வலிமையையும் எப்பொழுதும் பேணி பாதுகாத்துக் கொள்வீர்கள். உங்களின் தொழில் ஸ்தானாதிபதியும் யோகாதிபதியுமான சுக்கிரன் நீசம் பெற்று இருப்பதாலும், புதன் பரிவர்த்தனை பெற்று இருப்பதாலும் உங்களின் தொழிலில் சற்று பொருளாதார நெருக்கடி வந்தாலும் லாபாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கலைதுறையினர் வெற்றியில் பயணமாக வெளி இடங்களுக்கு சென்று வருவீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பால் உங்களின் எதிர்பாராத வளர்ச்சி மேன்மையை தரும். சிலருக்கு தசை புத்தி பலம் பெற்று இருந்தால் அரசு பணியில் வேலை வாய்ப்பு அமையும். உங்களின் எதிர்கால வளர்ச்சி இனி யாராலும் தடுக்க முடியாது சனி கொடுத்தால் யார் தடுப்பார். எதிரிக்கு கூட உதவி செய்யும் குணம் கொண்ட உங்களுக்கு இனி ஒரு தீங்கும் இல்லை.

அதிர்ஷ்ட நிறங்கள்:

நீலம், மஞ்சள், ஓரஞ்சு.

அதிர்ஷ்ட திசைகள்:

தெற்கு, தென் கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

சனி, செவ்வாய், புதன்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

12-11-2025 புதன் இரவு 12.52 முதல் 15-11-2025 சனி காலை 08.07 மணிவரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமைகளில் பைரவருக்கு அரளி பூ மாலையும், மூன்று நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி பைரவர் காயத்ரி சொல்லி வேண்டிக் கொள்ள சகல காரியமும் மேன்மையும், வளம் பெருகும்.

கும்பம்

உயர்ந்த பின்பும், உன்னதமான மன நிலையும் கொண்டு விளங்கும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்ந்தும் ராகு இணைவு பெறுவதும் போட்டி, பொறாமைகளில் இருந்து விடுபடாமல் யுக்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். முக்கிய செயல்களில் நினைத்தபடி எதையும் செயல்படுத்த தாமதம் ஆனாலும் ராசிநாதன் உங்களின் வளர்ச்சி உறுதுணையாக உதவிகளை செய்வார். அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் செல்வாக்கு பஞ்சம் வராமல் காத்து மேன்மையை அடைய செய்வார்.

உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று ராசியை பார்ப்பதும் சனியை செவ்வாய் பார்வை இடுவதால் சிலருக்கு எதையும் எதிர்த்து போராடும் மனவலிமை , மருத்துவ துறையினருக்கு வருமானம் பெருகும். நோயாளிகளின் எண்ணிக்கையை பெருக்க ஆதரவு கிடைக்கும். விளையாட்டு துறையில் உச்சகட்ட நிலையை எட்டுவீர்கள். எதையும் சவாலாகவும், எம்மால் முடியும் என்ற வைராக்கியமும் உண்டாகும். ஆறாமிடத்தில் அதிசார குரு புதிய கடன்படும் நிலை உருவாக்குவார். அத்தியாவசிய விடயங்களை தவிர வேறு எதற்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் செய்ய உடன் இருப்பவரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி கடன் வாங்கி தொழில் செய்தால் உங்களின் முதலீடுகளை இழக்க வேண்டி வரும். கலைத்துறையினரின் வளர்ச்சி சற்று பாதிப்பை தந்தாலும் உங்களின் வழக்கமான நிகழ்வுகளை தக்க வைத்துக் கொள்வீர்கள். புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளி போடுவது நல்லது. தர்ம காரியத்திற்கு உதவி செய்வதும் மருத்துவத்திற்கு பண உதவி செய்வதும் கோவில்களுக்கு கட்டிடநிதி தருவதும் உங்களின் தவிர்க்க முடியாத துன்பத்திலிருந்து உங்களை விடுவிக்கும். அரசியலில் உடன் இருப்பவர் மூலமே உங்களுக்கு தொல்லைகள் வரும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவைக்கு பண உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

நீலம், ஓரஞ்சு, வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:

மேற்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

சனி, திங்கள், செவ்வாய்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

15-11-2025 சனி காலை 08.08 முதல் 17-11-2025 திங்கள் மாலை 05.49 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடும், நவகிரக வழிபாடும் செய்து 27 மிளகு வெள்ளை துணியில் கட்டி நல்லெண்ணெய் தீபம் பைரவருக்கு ஏற்றி வேண்டிக் கொண்டு தயிர் அன்னம் வைத்து படைக்க சகல காரிய தடையும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.

மீனம்

உண்மையும், நேர்மையும் கொண்டு செயல்படும் மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு அதிசாரமாக ராசியை பார்வை இடுவதும். சுக்கிரனின் பார்வை ராசிக்கு இருப்பதும் உங்களின் அன்றாட செயல்கள் பலம் பெற்று வளமாக அமையும். எதை செய்தாலும் அதற்கு பக்கபலமாக உங்களின் செயல்பாடுகள் அமையும். எதை செய்தாலும் அதற்கு பக்கபலமாக உங்களின் செயல்பாடுகள் அமையும். யாரையாவது பார்க்க செல்ல வேண்டும். நினைக்கும் போதே அவரே வந்து உங்களின் முன்பும் நிற்பது ஆச்சிரியத்தை தரும். செய்யும் தொழிலில் இனிவரும் காலம் ஏற்றம் பெறுவீர்கள்.

உங்களின் ராசிக்கு பாக்கியாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று அமைவதும். உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். சுகஸ்தானத்தில் செவ்வாய் பார்வை பெறுவது வாகன வசதிகளை பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இல்லாமல் உங்களின் பணியை நீங்களே செய்து கொள்வீர்கள். எதிரிக்கு கூட எதுவும் நடக்க கூடாது என்று நினைப்பீர்கள். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும் போது அதனை தவிர்க்க நினைப்பீர்கள். இசை கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பாக்கியாதிபதி பலம் பெறுவது புனித யாத்திரையை சென்று வருதல், தீர்த்தமாடுதல் தெய்வ வழிபாடு ஆன்மீக ஈடுபாடுகளில் செயல்படுவீர்கள். தனித்துவ செயல்பாடுகளை வரவேற்பீர்கள்.

சூரியன் அட்டமஸ்தானத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்ப்பது உங்களின் அரசாங்க பணிகள் மிக சிறப்பாக நடக்கும். தொழிலிலும், தொழில் சார்ந்த பல பணிகளும் சிறப்பாக அமையும். பாதகாதிபதி எட்டில் மறைவதால் எதிலும் சாதகமான பலன்களை உண்டாகும். பல திட்டங்களை வழிவகுத்து நீங்கள் செய்யும் பல காரியங்கள் உங்களுக்கு நன்மையை பெற்று தரும். மாணவர்களுக்கு அறிவாற்றல் பெருகும். சிறந்த பணிகளை செய்து வெற்றியை பெறுவீர்கள். ஆன்மீகம் உங்களை தொடர்ந்து வாழ வைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

மஞ்சள், ஒரஞ்சு, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:

வடக்கு, மேற்கு, வடகிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வியாழன், வெள்ளி, செவ்வாய்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

17-11-2025 திங்கள் மாலை 05.50 முதல் 20-11-2025 வியாழன் அதிகாலை 05.10 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றியும் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றியும் மன உருக வேண்டிக் கொள்ள எண்ணிய எண்ணம் ஈடேறும்.

கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!