பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வெளிநாடுகளிடம் இருந்து உணவு பொருட்கள் உட்பட பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள் காலாவதியானவை என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களில், குறித்த பொருட்களில் காலாவதி திகதி என 2024ஆம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த புகைப்படங்களில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவு எனவும் உள்ளது.
இது உண்மையில் அதிர்ரச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள அதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவது தொடர்பில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இது தொடர்பான அரசாங்கத்தின் ஒரு உறுதிபடுத்தல் இந்த திடீர் அச்சநிலைமையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
