நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் ஆதரவற்ற நாய்களைக் கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் குறித்த ஆதரவற்ற நாய்கள் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கருணைக் கொலை செய்யப்படும் ஆதரவற்ற நாய்கள் முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு ஆண்டில் மாத்திரம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.