விசாரணைகளுக்கு தடை விதிக்கக் கூடாது: சுரேஷ் சலேயின் ரிட் மனுவுக்கு எதிராக பேராயர் நீதிமன்றில் மனு!

அரசியலமைப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டி. (CID) எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ரத்து செய்யுமாறு கோரி, கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை குறுக்கீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு எந்தவிதத் தடைகளும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தியே இந்த குறுக்கீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்னிலையில், எதிர்வரும் 17-ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!