இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி, இதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு சிறப்பு நிலையம் ஒன்றும் நிறுவப்பட உள்ளது.
மேலும், தற்போது, நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர் தற்காலிக ஓட்டுநர் உரிமங்களைப் பெற வெரஹெராவில் உள்ள போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இது நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதனால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு நிலையம் ஒன்றை நிறுவ அமைச்சு முடிவுசெய்துள்ளது.
மேலும் இந்த புதிய திட்டம் அடுத்த மாதம் 03 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.