மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சின் அழைப்பின் பேரில் அநுரகுமார திசாநாயக்க கடந்த 28ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (30) இரவு நாடு திரும்பினார்.

இதன் போது சர்வதேச விமான நிலையத்தில் டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்ப்பட்டுள்ளனர்.