“22வது திருத்தச் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் வலியுறுத்தல்!

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்தி, அதிகாரப் பிரிவினையைச் சீர்குலைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை இந்தச் சட்டமூலம் பாதிக்கும் என்பதால், உடனடியாக இதனை மீளப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உத்தேச மாற்றங்கள் நிறைவேற்றுத்துறை, நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இடையிலான சமநிலையைக் குலைத்து, நீதித்துறை மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் எச்சரித்தார்.

சட்டமூலம் தொடர்பாக உரிய தரப்பினரும் சட்ட நிறுவனங்களும் போதியளவில் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

இந்தச் சட்டமூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நீதிமன்றங்களில் நிலவும் வழக்குகளைத் தாமதமின்றி விரைவுபடுத்துவதற்கும், சிறந்த நீதித்துறைச் சேவைகளை வழங்குவதற்குமான பரந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியே இந்தத் திருத்தச் சட்டமூலம் என அரசாங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ThilinaGamage
குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நீதித்துறை பதவியிலிருந்து திலின கமகே அதிரடி நீக்கம்!
SriLankaEconomy
இலங்கையின் நுகர்வுச் செலவு 9 இலட்சம் கோடி: 4 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி என ஆய்வில் தகவல்!
Vavuniya
புளியங்குளம் விபத்தில் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு; தாய் படுகாயம்
TVK
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க தொடர் முன்னிலை; திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!
ShiranthiRajapaksa
கண் சிகிச்சைக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
NavothunneVijithaThero
மெல்பேர்ன் பௌத்த விகாரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 71 வயதான இலங்கை தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை!