‘சிறிலிய சவிய’ நிதி முறைகேடு விசாரணை: நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஷிரந்தி ராஜபக்ச அவகாசம் கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாக வேறு ஒரு திகதியை வழங்குமாறு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார“ தெரிவித்துள்ளனர்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) நேற்று (24) முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போது மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் தங்கியிருப்பதால், விசாரணைக்காக முன்னிலையாக வேறு ஒரு திகதியை வழங்குமாறும் கோரியுள்ளார்.

‘சிறிலிய சவிய’ (Siriliya Saviya) நிதியத்தின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!