கண் சிகிச்சை பெற ஷிரந்திக்கு நீதிமன்றம் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை கண் நோய் தொடர்பாக அவர் வழக்கமாக சிகிச்சை பெறும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் இன்று (8) அவரை அழைத்துச் செல்லுமாறு மேலதிக நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று (7) கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் பாதுகாப்பான இடத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalRajapaksa
30 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை: நாமல் ராஜபக்ஷவை விடுவிக்கக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
RanilWickremesinghe
மனைவியின் பட்டமளிப்பு விழாப் பயணம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!
JaffnaHinduCollege
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் வழக்கில் சமரச முயற்சி: அக்டோபர் 30க்கு ஒத்திவைப்பு!
JeevanThondaman
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இனவாதம்: மலையக மக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு
Pillayan
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு: பிள்ளையானுக்கு அக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியல்!
GnanasaraThero
ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 இல் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை