ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!

சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4100 அமெரிக்க டொருக்கு வர்த்தகமாகி வரும் நிலையில் 2028 இல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 8000 அமெரிக்க டொலர்கள் வரை உயரும் என JP Morgan (JP மோர்கன்) நிறுவனம் கணித்துள்ளது.

இந்நிலையில் உலக சந்தையில் நிலவும் தங்க விலைக்கு ஏற்ப, பாரிய வேறுபாடின்றி இலங்கையிலும் தங்க விலை நிர்ணயிக்கப்படும் என அகில இலங்கை நகை விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகிறது.

அதற்கமைய, ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 77,000 ரூபாய் குறைந்துள்ளது.

உள்ளூர் சந்தையில் கடந்த வாரம் சாதனையாக 24 கரட் தங்கத்தின் விலை 410,000 ரூபாயாக உயர்ந்தது.

எனினும் நேற்று, செட்டியார் தெரு தங்க சந்தையில் 24 கரட் தங்கத்தின் விலை 330,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் விலை 302,300 ரூபாயாகவும் பதிவானது.

அதற்கமைய, நேற்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலை மேலும் 10,000 ரூபாயாக குறைந்துள்ளது.

இந்நிலையில் 2028 இல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 8000 அமெரிக்க டொலர்கள் வரை உயரும் என வந்த அறிவிப்பு உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி அதிகரித்தால் இலங்கையில் 2028 இல் ஒரு பவுன் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 690,000 ரூபாயாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

night sky
இலங்கையின் வான்பரப்பில் இன்று ஏற்படவுள்ள அதிசயம்!
ishara sewwandi
செவ்வந்தியின் வங்கிக் கணக்கு குறித்து வெளியான தகவல்!
arrest
30 கோடி ரூபாய் பெறுமதியான பொக்கிஷங்கள் மீட்பு!சந்தேக நபர் கைது
gold price today
ஒரே நாளில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை!
afghanistan cricket player
வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி!
ishara sewwandi
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!