இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற இலங்கை பெண் ஹோட்டல் அறைக்குள் சடலமாக மீட்பு!

இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற இலங்கை பெண் ஒருவர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ஸ்ரவஸ்தி மாவட்டத்திலுள்ள ஹோட்டலில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

71 வயதான கொந்தாகொட சில்வா என்ற இலங்கை பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து புத்த மத தலங்களைப் பார்வையிட சென்ற 46 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவில் அவர் ஒருவராக இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் குறித்த பெண் தனது ஹோட்டல் அறையில் இருந்து நீண்ட நேரம் வெளியே வராமையினால் ஏனைய சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் அறையைத் திறந்தபோது, ​​அந்தப் பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

ஹோட்டல் ஊழியர்கள், முகாமையாளருக்கு தகவல் கொடுத்தனர், பின்னர் அவர் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த பொலிஸார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு அமைய, இயற்கை மரணம் என தெரிய வந்துள்ளதாக ஸ்ரவஸ்தி பொலிஸ் கண்காணிப்பாளர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முறையான முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, மேலும் சுற்றுலா குழு உயிரிழந்த பெண்ணின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல நடவவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!