யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட தன்னை அனுமதிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்த வழக்கு, நேற்று (ஜூலை 15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், அகழ்வு நடைபெறும் இடத்திற்கு செல்லுவதற்காக முன்னதாகவே அனுமதி கோர வேண்டிய நடைமுறை உள்ளதையும், அந்த இடத்துக்கு செல்லும் நோக்கத்தையும் நீதிமன்றத்தில் விளக்கி அனுமதி பெற வேண்டியதையும் நீதிவான் தெரிவித்தார்.
சிறீதரன் தனது பிரசன்னம் இந்த விசாரணையில் முக்கியமானதாக இருப்பதாகவும், சட்டத்தரணி ஒருவருடன் இணைந்து அகழ்வுப் பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து, அவரின் வேண்டுகோளை பரிசீலித்து, சட்டத்தரணியின் பங்குடன் அகழ்வு பணிகளுக்குச் செல்லும் அனுமதி தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என நீதிவான் மன்றில் தெரிவித்தார்.