துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு ஆட்களை விநியோகித்த ஆவா குழு!

கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் விசாரணைகளுக்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையின் பின்னர் நாட்டை விட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபர்கள், அண்மையில் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியபோது, கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சந்தேகநபர்கள் மீண்டும் நாடு திரும்பியபோது, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றத்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதோடு, துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு ஆட்களை விநியோகிக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்